சித்தர்கள் இராச்சியம்

Image by siththarkal.com

Friday, December 3, 2010

மனதைத் திறந்த அன்பு



பெண்களைப் பற்றி ஆண்கள் இன்றும் சொல்லும் ஒரே வார்த்தை "பெண்களைப்  புரிந்து கொள்ளவே முடியவில்லை" என்பது தான். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் என் அனுபவத்தில் பெண்ணின் மனது பெண்ணுக்கு தான் புரியும் என்பது முழுவதும் உண்மை.

பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் தான் ஆனால் இருக்கும் இடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வேறுபட்டு இருக்கிறார்கள்..ஆனால் ஒரே விஷயத்தில் மட்டும் எந்த பெண்ணும் வேறுபட்டது இல்லை தனக்குரியவர்களை என்றும் யாருக்காகவும் விடுக்குடுத்ததில்லை.

எந்த ஒரு பெண்ணும் தனது கணவரை வேறு பெண்ணுக்கு விட்டு குடுத்தில்லை. ஆனால் அதே பெண் குடும்ப சூழ்நிலை என்று வரும் போது தனது தோழியை விட்டு பிரிவதைத்  தவிர வேறு ஏதும் செய்ததில்லை என்று தான் இவ்வளவு  நாளும் நான் நினைத்திருந்தேன்.ஆனால் தோழியிடம் பழகிய பின்பே அது எவ்வளவு சிரமமானது என்று புரிந்தது.

 என்னால் என் தோழியை  அப்படி மறக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை.ஆனால் என்பதிவுக்கு சம்பதம் இல்லாத  பலபேர் இருக்கிறார்கள்.நண்பர்களை விட்டு கடைசி வரை பிரியாதவர்கள் அவர்களுக்கு என் தோழியின் மீது நான் கொண்ட அன்பு  நன்றாகவே புரியும்.

என்னை போல் நண்பர்களை மறந்தவ்ர்களுக்காகவே என்பதிவுகள் தோழியின் அறிமுகத்திற்கு பின்பே யோசிக்குறேன் நல்ல நண்பர்களை இழந்து விட்டோமே என்று. என் தோழியிடம் அறிமுகமான நாளில் எல்லோரும் அறிமுகம் ஆவது  போல் தான் தொடங்கியது அப்பொழுது நான் நினக்கவில்லை என்மனதை மொத்தமாக கொள்ளை கொள்வார் என்று.

 நானும் மற்றவர்களிடம் எப்படி கேள்வி கேட்பேனோ அதே போல் என்தோழியிடமும்  பல கேள்விகள் கேட்டேன் ஆனால் அவரின் தனிச்  சிறப்பே ஒரே வரியில் பதில் சொல்லிவிடுவார்.  திரும்ப கேள்வி கேட்காத அளவுக்கு அந்த பதில் இருக்கும் என்மனதும் அதை ஏற்று கொண்டது.

இன்று வரை என்தோழி சொல்லும் பதிலில் அர்த்தம் இருக்கும் என்றே திரும்ப கேட்கமாட்டேன் ஆனால் மற்றவர்களிடம் நான் அப்படி இல்லை ஒரு கேள்விக்கு ஒன்பது கேள்வி கேட்பேன். என் தோழி  என்னை போல் வள வளவென்றும் பேச மாட்டார்.

இதை எல்லாம் ஒரே நாளில் என்னால் அவர்களிடம் புரிந்து கொள்ள  முடிந்தது.என்மனதும் அன்றே அவரிடம் வீழ்ந்தது என்னை அறியாமலேயே.ஒரு காதலனை நேசிப்பது போல் தான் அவர்மேல் என் உள்ளம் அன்பு கொண்டு இருந்தது.  

அப்பொழுது தான் புரிந்தது நண்பர்களும் வேறு அல்ல என்பது. உண்மையான அன்பிற்கு நிகர் வேறு ஒன்றும் இல்லை என்பது நன்றாகப் புரிந்தது."வாழ்க்கையில்  எதை இழந்தாலும் நல்ல  நண்பர்களை மட்டும் இழக்கக் கூடாது என்றும் மனதில் ஆழமாக பதிந்தது இதற்கு காரணம் என்தோழியே".  

ஏன் என்றால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையாக பழகிய அவரின் உள்ளத்திற்கு என்னால் தரமுடிந்தது என் அன்பை மட்டுமே ,,,சில நேரம் அவரிடம் பாட்டு எல்லாம் கூட  பாடி இருக்கிறேன் அதை பற்றி இனி வரும் பதிவுகளில் கூறுகிறேன் யாரும் என்னை பார்த்து சிரிக்ககூடாது ஏன்  உங்களுக்கு அப்படி தோன்றியது என்று ,,,

குறிப்பு:வரும் வியாழன் (09-12-2010) அன்று எனது திருமணம் என்பதால் என்பதிவுகளை திருமணத்திற்கு பின்பு தொடரலாம் என்று உள்ளேன்,,அதுவரை நண்பர்கள் காத்திருக்கவும் ,,,,தொடர்ந்து எழுதுவேன்.

8 comments:

  1. தோழிக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.
    உங்கள் கணவர் மிகவும் கொடுத்து வைத்தவர்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. அன்பு கொண்ட எல்லோரும் குடுத்து வைத்தவர்கள் தான்,,,நானும் கொடுத்து வைத்தவள் தான் உங்களை போல தோழர்கள் கிடைப்பது அரிதல்லவா ,,,மிகவும் நன்றி

    ReplyDelete
  3. adutha pathivukku kathirukoam....nandraaaga pohirathu...thodaravum

    thurumanaththirku vaaalthukkal

    ReplyDelete
  4. வாழ்வின் ஓர் உன்னத நிலையான, திருமண வாழ்க்கையில் 09.12.2010 அன்று அடியெடுத்து வைக்கும் தங்களை, மதுரை சுந்தரேஸ்வரரும் மீனாட்சியம்மையும் போல் ஆண்டாண்டு காலம் அருளுடனும், பொருளுடனும் வாழ, அருள்வடிவான சிவப்பரம்பொருளை பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.

    தங்களின் அன்பு உலக உயிர்கள் அனைத்திற்கும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  5. உங்கள் திருமணத்திற்கு என் அன்பு வாழ்த்துக்கள்.
    உங்கள் நட்பின் மேன்மை மென்மையுடன் தொடரட்டும்.

    ReplyDelete
  6. மகராசியா, நல்லா இருப்பீங்க ஆத்தா..!

    ReplyDelete
  7. ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் சூழ நிறைவாய் வாழ்ந்திட வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்..

    ReplyDelete