சித்தர்கள் இராச்சியம்

Image by siththarkal.com

Tuesday, November 23, 2010

எனது அன்பின் தொடக்கம்



இந்த பதிவில்  எனது மனது கவர்ந்த ஒரு பெண்ணிற்கு   என் அன்பை  சமர்ப்பணம் செய்யவே எழுதுகிறேன். நீங்களும் கேட்கலாம் ஒரு மெயில் அனுப்பி உங்க அன்பை கூறலாமே என்று  கேள்விகள் பலவிதத்தில் எழுந்தாலும் பதில் இந்த பதிவு மற்றும் இனிவரும் பதிவுகளிலும் உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கும். இந்த பரபரப்பான நாட்களில் நாம் உண்டு நம் வேலை உண்டு நம் குடும்பம் பிள்ளை,குட்டிகள் என்று ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். 

பழைய கால சொந்த பந்தங்களுக்கு இடை இருந்த அன்பு,பாசம்,நேசம் எதுவும் இன்றைய காலகதில் பார்க்க முடியாது ஏன் என்றால் நம் வேலையை பார்கவே நமக்கு நேரம் சரியாக இருக்கிறது இதில் எங்கு அன்பு,பாசம்,நேசத்தை தேடிக்கொண்டு இருப்பது என்று பலபேர் கேட்கலாம்.என்னுடைய பதிவின் நோக்கம் எனது பதிவை படிக்கும் சில பேராவது ஒருமுறை உங்களுடைய அன்பானவர்களை நினைத்து பார்க்க வேண்டும் என்பதே.

இன்றய நாட்களில் ஒரு பாலருகுள் அன்பு கொண்டால் தவறாக பார்க்கும் காலம் ஆகிவிட்டது ஒரு ஆண் பெண்ணின் மீது அன்பு கொண்டால் காதல் கல்யாணம் என்று வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது அதுவரை நம்முடன் இருந்த தோழர்,தோழிகளை மறந்து ஒரு புதிய வாழ்க்கைக்குள் போய்விடுகிறோம் திரும்பி பார்க்க நேரம் இல்லாமல் உழைக்க தான் நேரம் இருக்கிறது.

நானும் உங்களை போல் சாதாரண பெண் தான் காதல் கல்யாணம் என்று என்வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது ஆனால் இதுவரை எந்த தோழர்,தோழிகளிடம் அதிகமாக பழகியது இல்லை பழகினாலும் அதிகமாக அன்பை பரிமாறியதும் இல்லை.ஆனால் திடிரென்று என் வாழ்கையில் ஒரு பெண் வந்தாள் என்தோழியாக யாரிடம் இல்லாத  அன்பை அந்த பெண் மீது என் உள்ளம்  கொண்டு உள்ளது  அது ஏன் என்று இன்று வரை எனக்கு தெரியாது.

அந்த பெண்ணை நான் இன்று வரை பார்த்ததும் இல்லை. ஒருமுறை போட்டோவில்  மட்டுமே பார்த்திருக்கிறேன். எங்கள் நட்பு சாதாரண நட்பாக  ஆரம்பித்து இன்று என்மனதில் ஆலமரமாக நிற்கிறது.அவள்மேல் என்மனது கொண்டுள்ள அன்பை பற்றி இனிவரும் எனது பதிவுகளில் எழுதபோகிறேன் இதை யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் நான் அன்பு கொண்டுள்ள அந்த பெண்ணுக்கு  நன்றாக புரியும் எனது உண்மையான அன்பு,,,

5 comments:

  1. அடுத்த பதிவுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்காதீங்க, சீக்கிரமா அவங்களப் பத்தி சொல்லுங்க.

    ReplyDelete
  2. நட்புக்காக பிளாகா !! உங்க மனசுல அவங்களுக்கு அவ்வளவு உயரிய இடமா ..... நல்ல விஷயம்

    ReplyDelete
  3. ஒரு பெண்ணே பெண்ணை புகழ்றாங்க , ரொம்ப பெரிய விஷயம், யாருங்க அவங்க.

    ReplyDelete
  4. jagadeesh said...
    அடுத்த பதிவுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்காதீங்க, சீக்கிரமா அவங்களப் பத்தி சொல்லுங்க.
    November 23, 2010 8:40 AM

    chandru2110 said...
    நட்புக்காக பிளாகா !! உங்க மனசுல அவங்களுக்கு அவ்வளவு உயரிய இடமா ..... நல்ல விஷயம்
    November 23, 2010 8:46 AM

    மிகவும் நன்றி தோழர்களே,,,இனிவரும் பதிவுகள் அவர்களை பற்றியதே.

    ReplyDelete
  5. அன்பை காட்டுங்கள்.. தொடர்கிறோம்

    ReplyDelete